• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.1 லட்சம் அபராதம்!

ByKalamegam Viswanathan

Apr 22, 2025

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2023 ஆம் ஆண்டு காதலிப்பதாக ஆசி வார்த்தை கூறி, பாலியல் வன்கொடுமை செய்த பஞ்சம்பட்டியை சேர்ந்த கேத்தேஸ்ராஜா(19) என்பவரை சின்னாளப்பட்டி போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், சின்னாளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, கேத்தேஸ்ராஜாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.