• Tue. Mar 24th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குபவர் யார்?

Byமதி

Dec 3, 2021

ரஜினியின் அடுத்த படம் யாருடன் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. எப்படியாவது மிகப் பெரிய ஹிட் கொடுத்தாக வேண்டும் என ரஜினி எண்ணிக்கொண்டு இருக்கிறார்.

எனவே, சமீபத்தில் ஐந்து இயக்குநர்களிடம் ரஜினி தனித்தனியே கதை கேட்டிருக்கிறார். ஆனால் வந்த எல்லோருமே ஒன் லைன் மட்டுமே சொல்லி ஒக்கே என்றால் முழுக்கதையைத் தயார் செய்கிறேன் என்று சொல்லியுள்ளனர். இது ரஜினியை மிகவும் வேதனை வைத்திருக்கிறது.

தனது இன்ஸ்டியூட் நண்பரான அந்த இயக்குநருக்கு போன் செய்து, நான் ஒரு வருடத்திற்கு 28 படங்கள் செய்திருக்கிறேன். அவ்வளவு கதைகள் கிடைத்தன. ஆனால் இன்று அப்படிப்பட்ட கதைகள் இப்போது கிடைக்கவில்லையே என்று பேசியிருக்கிறார்.

இந்நிலையில் அடுத்தப்படம் என்பது வெற்றியைத் தொட்டாக வேண்டும், அதோடு படத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று ரஜினி விரும்புகிறார். இதற்குச் சரியான இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் என்பது ரஜினியின் விருப்பமாக இருக்கிறது. பல மாதங்களாகவே ரவிக்குமாரிடம் தனது ஒரு கதை தயார் செய்யும்படி ரஜினி பேசி வந்திருக்கிறார். அதனால் அடுத்தப்படம் தன் ஆஸ்தான இயக்குநர் ரவிக்குமார் என்று ரஜினி தரப்பில் கூறுகிறார்கள்.