ஒன்பது லட்சம் வயிறுகளின் பசியாற்றிய மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் சார்பில் மகாளய அமாவாசையை முன்னிட்டு 3000 பேருக்கு இன்று அன்னதானம் வழங்கப்பட்டது

கொரோனா காலக்கட்டத்தில் தொடங்கப் பெற்ற மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் மூலம் ரோட்டோரத்தில் உள்ள வரியவர்கள் மனம் நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொது மருத்துவமனைகளில் பார்வையாளர்கள் பகுதிகளில் உள்ளவர்களுக்கு என தினந்தோறும் 300 பேருக்கு மதிய உணவினை வழங்கி வருகிறது மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட்
இதுவரை கடந்த ஏழு வருட காலத்தில் 9 லட்சம் பேருக்கு மதிய உணவினை வழங்கி அவர்களின் பசியினை போக்கி இருக்கிறது

மஹாளய அமாவாசையை முன்னிட்டு மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் 3 ஆயிரம் பேருக்கு இன்று அன்னதானம் மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் மூலம் வழங்கப்பட்டது. மதுரை மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள ஆலால சுந்தர விநாயகர் கோவில் முன்பு அட்சயப் பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு தலைமையில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா அவர்களால் வழங்கப்பட்டது. நிகழ்வில் ஆடிட்டர் சேது மாதவா பங்கேற்றார்.
இந்த புனிதமான பணிக்கு உதவ விரும்புகிறவர்கள் 9442630815 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவலாம்.



