சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் திருச்சி வந்தவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. தொற்று உறுதியான தஞ்சை நபருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என கண்டறிய மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் ஓமிக்ரான் கொரோனா பரவிய நிலையில் தஞ்சை நபரின் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. கொரோனா உறுதியான நபருக்கு திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பரிசோதனையின் முடிவுகள் வந்த பிறகு என்னவகை கொரோனா என தெரிய வரும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் 136 பயணிகளிடம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதிய வகை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து அவரின் மாதிரிகள் ஒமிக்ரான் வகை கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூரை சேர்ந்த அந்த நபர் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருச்சி ஆட்சியர் கூறுகையில் இவருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய மாதிரிகள் ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.