சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ரோட்டிராக் அமைப்பு, ரோட்டரி கிளப் விருதுநகர் கிங்டம், மதுரை நட்பு தமிழ் வட்டம், விருதுநகர் ஜெயஜானகி அறக்கட்டளை ஆகிய அமைப்புகளோடு இணைந்து “நம்மை நாமறிந்தால்” என்ற தலைப்பில் நடத்திய பேச்சரங்க நிகழ்வு ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு ரோட்டரி கிளப் விருதுநகர் கிங்டம் அமைப்பின் தலைவர் Rtn.G.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமை ஏற்று வரவேற்புரை வழங்கினார். அவர்தம் வரவேற்புரையில், இந்த பேச்சரங்கத்தின் நோக்கம் புதிய சிந்தனை உள்ள பேச்சாளர்களை உருவாக்குவதே” என்று எடுத்துரைத்தார். இந்நிகழ்விற்கான வாழ்த்துரையைக் கல்லூரி முதல்வர் பாலமுருகன் வழங்கினார். “மாற்றம் வளர்ச்சியின் அடிப்படை. இன்றைய வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது. அதை மாற்ற நாம் யார் என்பதை அறியவேண்டும். அவ்வாறு அறிந்தால் பின்னோக்கிய நிலையை மாற்ற முடியும்” என்பதை எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து கல்லூரியின் ரோட்டிராக் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், ..ரூபாதேவி வாழ்த்துரை வழங்கினார். சின்ன சின்ன வார்த்தைகள் கூட கூட்டத்தின் கவனத்தை ஈர்க்கும். அத்தகைய வார்த்தைகளைப் பேசுவதற்கான அரங்கமாக நம்மை நாமறிந்தால் என்னும் பேச்சரங்கம் உள்ளமையைக் கூறி வாழ்த்துரைத்தார்.
இப்பேச்சரங்கத்தில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கலந்து கொண்டு பேசினர், மதுரை நட்பு தமிழ் வட்டத்தைச் சார்ந்த வழக்கறிஞர் மு.ஆசைத்தம்பி அவர்களும் கவிஞர் கசோரா அவர்களும் இந்நிகழ்விற்கு நடுவர்களாக இருந்தனர். ரோட்டரி கிளப் விருதுநகர் கிங்டம் அமைப்பின் சார்பாக கல்லூரியின் பொதுநூலகத்திற்கு மூன்று நூல்கள் பரிசாக வழங்கப்பெற்றது. இப்பேச்சரங்கத்தில் முதுகலைத்தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவன் மா.மாதவன் முதல் பரிசையும் இளநிலை உயிர்நுட்பவியல் முதலாம் ஆண்டு மாணவன் பரிசையும் இளங்கலைத்தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவி க.கார்த்திகைச்செல்வி மூன்றாம் பரிசையும் பெற்றனர். து.சந்தோஷ் பிரபு இரண்டாம்

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளைக் கல்லூரி ரோட்டிராக் கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் ரூபாதேவி மற்றும் சக்திலீலா ஆகியோர் செய்திருந்தனர்.



