• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் குறித்து பிசிசிஐ முக்கிய முடிவு

Byமதி

Dec 3, 2021

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வரும் 17-ஆம் தேதி முதல் ஜனவரி 26-ஆம் தேதி வரையில் மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் நான்கு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் தான் முதன்முதலில் ஒமிக்ரான் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. தற்போது இந்த வைரஸ் உலகையே அச்சுருத்தி வருகிறது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை ஒரு வாரம் தள்ளி வைக்கும்படி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திடம் வேண்டுகோளாக கேட்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே நேரத்தில் இந்த சுற்றுப்பயணத்தில் இபெற்றுள்ள மூன்று டெஸ்ட் போட்டியை இரண்டாக குறைக்கவும், பயோ பபூள் நடைமுறையை கடுமையாக்கவும் பிசிசிஐ கேட்க உள்ளதாம்.

இந்தியாவின் கோரிக்கையை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டால் இந்த சுற்றுப்பயணத்தின் மாற்றி அமைக்கப்பட்ட புதிய அட்டவணை விரைவில் வெளியாகும் எனவும், பிறகே இந்திய அணியின் பயணம் இருக்கும் என தெரிகிறது.