• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம்..,

தேனி மாவட்டம் கம்பம் நகரில் நலவாழ்வு உரிமைச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்
மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

சுகாதாரத்தை மக்களின் அடிப்படை உரிமையாக்கும் வண்ணம் அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அதற்கென தனியே சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஏப்ரல் மாதம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெற்ற கையெழுத்து இயக்கதிற்கு ஆரோக்கிய உபகுழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திலீபன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் நித்தியானந்தன் வரவேற்றுப் பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் சுந்தர், ஶ்ரீராமன், ரவீந்திரன், மணியரசன், முரளி, சிவசாமி, பூர்ணிமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சையை அரசின் செலவில் வழங்க வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இயக்கத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.
அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் வெங்கட் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.