• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

7-ந் தேதி நடைபெறுகிறது அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல்

Byமதி

Dec 2, 2021

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், இன்று உட்கட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டள்ளது. 5ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதிக்கு உட்பட்டு இந்த தேர்தல் நடைபெறுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தேர்தலை நடத்தும் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நாளை 3-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் நடைபெறுகிறது. 4ம் தேதி காலை 10 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற 6-ம்தேதி கடைசி நாள் என்று அ.தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. உட்கட்சித் தேர்தல் 7.12.2021 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. வரும் 8-ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அன்றே முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.