பொறுமையான முயற்சியே வெற்றிக்கு அடித்தளம். வெற்றியையும் அதனைக் கொண்டாடும் மனநிலையையும் ஆழமான குடும்ப உறவையும் தருகின்ற பொறுமை கடலினும் பெரிதே.
அவசரம் நமக்குச் சிப்பிகளைத் தரலாம். ஆனால் பொறுமையே முத்துக்களைத் தரும்.
பொறுமையைவிட மேலான தவமுமில்லை. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!
தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!
படித்ததில் பிடித்தது
