புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,
“திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாங்கரை கிராமத்தில் கல்லறை தோட்டம் அமைந்துள்ள இடம் பிரச்சனை சம்பந்தமாக தனிநபர் குண்டர்களை வைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் நடைபெற்று உள்ளது இதுபோல் திண்டுக்கல் முழுவதும் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று உள்ளது. இந்த சம்பவங்கள் வெளியில் வராமல் காவல்துறை உதவியுடன் மறைக்கப்படுகிறது.
காவல்துறையினர் வேட்டி மற்றும் துண்டு போடாத திமுக நபர்கள் போல் நடந்து கொள்ளக் கூடாது. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு வழங்காதது. காவல்துறை ஆணவ போக்கு போல் செயல்கள் உள்ளது. நாங்கள் சட்டத்தை மதிக்கக் கூடியவர்கள்.
ஜனநாயகத்தின் தனிநபர்களுக்கு உரிமை உண்டு. அமைச்சர்களாக இருப்பவர்கள் மற்றவர்களின் உரிமையை பறிக்கக்கூடாது.திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெறுகிறது அவை அனைத்தும் மூடி மறைக்கப்படுகின்றன சம்பவங்கள் அனைத்தையும் கண்டிப்பாக அடுத்த சந்திப்பில் பட்டியலிடுவோம்.
தென் மாவட்டங்கள் வளர்ச்சி அடையாமல் உள்ளன. திண்டுக்கல் மாநகராட்சியாக அறிவித்த பின்பும் புதிய தொழிற்சாலைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. சவுக்கு சங்கருக்கும் எங்களுக்கும் எந்தவிதமான உறவும் இல்லை.
அவர் ஆளுங்கட்சிக்கு எதிராக பேசியுள்ளார் என்பதற்காக அவரது தாயார் தனியாக வீட்டில் இருக்கும் பொழுது கழிவு நீர்களை அவரது வீட்டில் ஊற்றுவது எந்த விதத்தில் நியாயம்? என்ன சட்ட ஒழுங்குகளை பாதுகாத்து வருகிறீர்கள். இவை ஒரு நாட்டில் அனுமதிக்க பட வேண்டிய விஷயமா?
அரசுடன் கூட்டணியில் இருக்கிறார்கள் என்பதற்காக யார் என்ன செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? சவுக்கு சங்கர் கூறியது மிக முக்கிய விஷயம் என்னவென்றால் சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் வழங்கக்கூடிய போக்குவரத்து வாகனங்கள் அனைத்தும் துப்புரவு பணியாளர்கள் பெயரில் வாங்கப்பட்டு மோசடிகள் நடைபெறுகிறது.
இதுகுறித்து விசாரணை செய்ய வேண்டும். திமுக 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு 76 பட்டியல் இன சாதி மக்களுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒரு சில சாதியினர் பெயரில் குறிப்பிட்ட கட்சிகள் மட்டுமே அபகரித்துக் கொள்கின்றனர்.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் தாட்கோ மூலம் வழங்கப்பட்ட நிதியில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று உள்ளது.இதுகுறித்து சவுக்கு சங்கர் கூறியுள்ளார் எனவே இது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வழங்க வேண்டும். மற்றும் விசாரணை நடைபெற வேண்டும்.
சென்னையில் எவ்வாறு ஒரு சாதியை சேர்ந்தவருக்கு ரூபாய் 500 கோடிக்கு மேல் நிதி வழங்க முடியும். அப்படி என்றால் மற்ற சாதியினர் பட்டினியுடன் இருக்க வேண்டுமா?76 சாதிகளுக்கு வழங்கப்பட்ட நிதி ஒரு சாதிக்கு மட்டும் வழங்கிவிட்டு அதுவும் அவர்களுக்கு செல்லாமல் கட்சிகள் எடுத்துக் கொள்கின்றன.
அதற்கு இந்த அரசு துணை போகாமல் வெள்ளை அறிக்கை விட வேண்டும்.
பல பள்ளிகளில் மும்மொழிக் கொள்கைதான் உள்ளது. எனவே இரண்டு மொழிகளைப் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டாம். தமிழ்நாட்டிற்கு மூன்று மொழிகள்தான் கரெக்ட் (correct).திமுக ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களில் குற்றவாளிகள் தப்பிக்க விடப்படுகின்றனர் அதை கண்டிக்கின்றோம்.
2026 இல் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பகிர்வு என்பதுதான் எங்களது கொள்கை அதை வைத்து தான் எந்த ஒரு கூட்டணியும் அமைய வேண்டும். திமுகவை மாற்றுவது என்ற கூட்டணி ஆகாது.தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் ஆட்சியில் பகிர்வு என்ற லட்சியத்தோடு, குறிக்கோளோடு தான் ஆட்சி மாற்றம் நடைபெற வேண்டும்.
இந்தக் கூட்டணியில் யாரெல்லாம் பங்கு வகிப்பார்கள் என்பது தெரியவில்லை. புதிய தமிழகம் கட்சி ஆட்சியில் பகிர்வு என்ற கொள்கையின் அடிப்படையில் பயணம் இருக்கும்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான கூட்டணி அமைவதற்கான முன்னெடுப்பை புதிய தமிழகம் கட்சி செய்யும். ஒரு வருடம் உள்ளது எனவே புதிய தமிழகம் கட்சி கூட்டணி குறித்து தற்போது கூற முடியாது.
அதிமுக – அமித்ஷாவை சந்திப்பது என்பது 2026 அரசியலில் சூடு பிடித்துள்ளது. புதிய தமிழகம் கட்சி ஆட்சி மாற்றத்துடன் கூடிய ஆட்சியில் பங்கு என்ற கொள்கையுடன் செயல்படுகிறது” என தெரிவித்தார்.



