• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Mar 28, 2025

பேசி தீருங்கள்.
பேசியே வளர்க்காதீர்கள்.

உரியவர்களிடம் சொல்லுங்கள்.
ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.

நடப்பதைப் பாருங்கள்.
நடந்ததைக் கிளறாதீர்கள்.

உறுதி காட்டுங்கள்.
பிடிவாதம் காட்டாதீர்கள்.

விவரங்கள் சொல்லுங்கள்.
வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.

தீர்வை விரும்புங்கள்.
தர்க்கம் விரும்பாதீர்கள்.

விவாதம் செய்யுங்கள்.
விவகாரம் செய்யாதீர்கள்.

விளக்கம் பெறுங்கள்.
விரோதம் பெறாதீர்கள்.

சங்கடமாய் இருந்தாலும்
சத்தியமே பேசுங்கள்.

செல்வாக்கு இருந்தாலும்
சரியானதைச் செய்யுங்கள்.

எதிர் தரப்பும் பேசட்டும்.
என்னவென்று கேளுங்கள்.
எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.

நேரம் வீணாகாமல்
விரைவாக முடியுங்கள்.

தானாய்த்தான் முடியுமென்றால்,
வேறு வேலை பாருங்கள்.

யாரோடும் பகையில்லாமல் புன்னகித்து வாழுங்கள்….

வாழ்க்கை குறுகியது,
ஆனா
அழகானது…

உப்பைக் குறையுங்கள்
என்று எல்லா டாக்டர்களும் சொல்கிறார்கள்.

அதனால்
வாழ்க்கையில் நாம் குறைக்க வேண்டி ய உப்புகள் சில:-

கணவன்கள் – படபடப்பு
மனைவிகள் – நச்சரிப்பு
டீன் ஏஜ்க்கள் – பரபரப்பு
மாணவர்கள் – ஏய்ப்பு
மாமியார்கள் – சிடுசிடுப்பு
மருமகள்கள் – கடுகடுப்பு
வக்கீல்கள் – ஒத்திவைப்பு
டாக்டர்கள் – புறக்கணிப்பு
அரசியல்வாதிகள் – ஆர்ப்பரிப்பு
வயதானவர்கள் – தொணதொணப்பு

ஆனால், யாரும் குறைக்கத் தேவையில்லாத ஒரே உப்பு
சிரிப்பு.

இது உடம்புக்கு மிகச்சிறப்பு…