இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடி தூக்கு கயிற்றை முத்தமிட்ட மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 94 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட குழு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் கம்பம் சிக்னல் அருகே நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் விக்னேஸ்வரன் வரவேற்றார். கம்பம் ஒன்றிய செயலாளர் ஜினு முகமது ஒன்றிய தலைவர் சாமி கண்ணன் முன்னிலை வகித்தனர். ரத்ததான முகாமை தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பீர்மேடு சட்டமன்ற உறுப்பினர் வாழுர் சோமன், சிபிஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வி.கல்யாண சுந்தரம், மதிமுக மாவட்ட செயலாளர் வி.எஸ்.கே ராமகிருஷ்ணன், சிபிஎம் ஏரியா செயலாளர் கே.ஆர் லெனின், திமுக கம்பம் நகர செயலாளர்கள் எம்.சி வீரபாண்டியன், சி. பால்பாண்டி ராஜா, துணிந்து நில் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் வேல் பாண்டியன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினரும், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினரும் ரத்ததானம் செய்தனர். ரத்த தானம் செய்பவர்களுக்கு வேண்டிய உதவிகளை அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலக்குழு கௌரி, தீபா, மாவட்டத் துணைத் தலைவர்கள் வேல்முருகன், காளீஸ்வரன், துணைச் செயலாளர்கள் ஜெய்ஹிந்த், காரல் மார்க்ஸ், மாவட்ட குழு நாட்ராயன், மணிகண்டன், தீனதயாளன், கனிச்செல்வம், பிரேம்குமார், சிவக்குமார், மகேந்திரன் ஆகியோர் செய்து கொடுத்தனர்.