• Fri. May 29th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் தேர்தலுக்கு அதிமுக சார்பில் விருப்ப மனு தாக்கல்.

தேனி மாவட்டம் ,ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக சார்பில் விருப்ப மனுக்களை அதிமுக மாவட்ட செயலாளர் சையது கான் மற்றும் கம்பம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய சேர்மனும் ஆண்டிபட்டி அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளருமான லோகிராசன், ஒன்றிய குழு துணை தலைவரும் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளருமான வரதராஜன் ஆகியோரிடம் விருப்ப மனுக்களை வழங்கினர் .

விருப்ப மனுக்களுக்கு நபர் ஒன்றுக்கு ரூபாய் 1500 செலுத்தி பதிவு செய்து கொண்டனர் .இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, விருப்ப மனுக்களை அளித்தனர்.