• Fri. Dec 26th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழக அரசு சார்பில் இலவசமாக சூரிய நிறுவல் பயிற்சி

Byவிஷா

Mar 21, 2025

தமிழக அரசு சார்பில் மார்ச் 26 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை இலவசமாக சூரிய நிறுவல் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தெரிவித்திருப்பதாவது..,
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 15 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் சூரிய சக்தி நிறுவல் பயிற்சி வரும் 26.03.2025 முதல் 12.04.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் சூரிய சக்தி துறையில் தொழில்முனைவோரின் அடிப்படைகள், சூரிய சக்தி தொழில் மற்றும் சந்தை போக்குகள் பற்றிய கண்ணோட்டம், சூரிய சக்தி அடிப்படைகள் அறிமுகம், சூரிய சக்தி பிவி அமைப்புகளின் கூறுகள், குழு விவாதம்: சூரிய சக்தி வணிக சவால்கள், சூரிய சக்தி பிவி-க்கான வணிக மாதிரிகளைப் புரிந்துகொள்வது, நிதி திட்டமிடல், செலவு மற்றும் வருவாய் அமைப்பு, அடிப்படை நிதித் திட்டத்தை உருவாக்குதல், இடர் பகுப்பாய்வு மற்றும் மேலாண்மை, சூரிய சக்தி பிவி-க்கான சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகள், உரிமம் மற்றும் சான்றிதழ் தேவைகளைப் புரிந்துகொள்வது, தேவையான ஆவணங்களைத் தயாரித்தல், மானியம் மற்றும் ஊக்கத்தொகை திட்டங்களை ஆராய்தல், சூரிய சக்தி வணிகங்களுக்கான சந்தைப்படுத்தல் உத்திகள், பிராண்டிங் மற்றும் விளம்பர நுட்பங்கள் போன்றவை வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும். அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.
இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்ஃபெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொலைபேசி ஃ கைபேசி எண்கள்; 8668108141 8668102600: தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032.