



திண்டுக்கல் மாவட்டம் பழனி வ உ சி பேருந்து நிலையத்தில் உள்ள கோயமுத்தூர் செல்லக்கூடிய பேருந்து நிறுத்தம் பகுதியில் அரசு பேருந்து ஒன்று நின்றுள்ளது. அப்போது அங்கு மதுபோதையில் வந்த இளைஞர் ஒருவர் ஆபாசமாக பேசி மற்றும் பேருந்தின் முகப்பு கண்ணாடியை உடைத்தும் நடத்துனரின் வாக்குவாதம் செய்தும் நடத்துனரே அடித்தும் கொண்டிருந்தார்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் மர்ம ஆசாமியை பிடித்து கட்டி வைத்து பழனி காவல் நிலையத்திற்கு இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மது போதையில் பேருந்தின் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் பேருந்தின் நிலையத்தின் மையப்பகுதியில் நடத்துனர்களை தாக்கியும் பேருந்தின் கண்ணாடியை உடைத்தும் போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

