• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மருதகாசி காலமான தினம் இன்று!

Byகாயத்ரி

Nov 29, 2021

மருதகாசி என்பவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர். 1949 இல் பாடல்கள் எழுதத் தொடங்கிய இவர் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு நாலாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.

திருச்சி மாவட்டம், மேலக்குடிகாடு கிராமத்தில், 1920 பிப்ரவரி 13ல் பிறந்தார்.கும்பகோணம் அரசு கல்லுாரியில் உயர் கல்வி கற்றார். இளம் வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். தேவி நாடக சபா மற்றும் கவிஞர் கா.மு.ஷெரீபின் நாடகக் குழுவில் இணைந்து, பாடல்கள் எழுதினார்.

கடந்த 1949ல் வெளியான, மாயாவதி என்ற படத்தின் மூலம், தமிழ் திரையுலகிற்குள் நுழைந்தார். மந்திரிகுமாரி, அமரகவி, துாக்குத் துாக்கி உட்பட 250 படங்களில், 4,000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். மெட்டுக்கு விரைவாகப் பாட்டு எழுதுவதில் வல்லவர்.

குறிப்பாக “வாராய்… நீ வாராய்! ‘கடவுள் எனும் முதலாளி, முல்லை மலர் மேலே, காவியமா நெஞ்சின் ஓவியமா…’ உள்ளிட்ட பல பாடல்கள் மூலம், தமிழர் நெஞ்சங்களில் நிறைந்துள்ளார். சில திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். 1989 நவம்பர் 29ல், தனது 69வது வயதில் காஸமானார். பல கவிதைகளின் நாயகன் மருதகாசி காலமான தினம் இன்று!