• Sun. May 31st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

மார்ச் 22 வரை மழைக்கு வாய்ப்பு

Byவிஷா

Mar 19, 2025

தமிழகத்தில் மார்ச் 22ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அம்மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மார்ச் 22-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 35.6-37.4 டிகிரி பாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரைப் பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 93.2-95 டிகிரியை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 78.8 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் சாம்ராஜ் எஸ்டேட்டில் 5 செமீ மழை பதிவானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.