• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மானாமதுரை ரயில் நிலையத்தில் சுமார் 20 கிலோ புகையிலை குட்கா..,

ByG.Suresh

Mar 19, 2025

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில் நிலையத்தில் வாரணாசியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் நின்றபோது, ராமேஸ்வரம் சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் மயில்முருகன் தலைமையில் தலைமைக் காவலர் சுரேஷ்குமார், காவலர் பரணி செல்வம் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 20 கிலோ புகையிலை குட்கா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, புகையிலை குட்கா கைப்பற்றப்பட்டு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இதை கடத்தி வந்து யார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்