• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மத்திய சட்டமன்றத் தொகுதி அரசின் நலத்திட்ட சிறப்பு

ByKalamegam Viswanathan

Mar 12, 2025

மதுரையில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில்,பொதுமக்கள் அளித்த க்கும் மேற்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

மதுரை மாவட்டம், மத்திய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள மதுரை கல்லூரி மைதானத்தில் இன்று (12.03.2025) அரசின் நலத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும்
முகாமை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தொடங்கி வைத்து, பொதுமக்கள் அளித்த -க்கும் மேற்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து,தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்ததாவது:-

ஒரு ஜனநாயக நாட்டினுடைய அரசாங்கத்தின் முக்கிய கடமை மக்களின் குறைகளை கண்டறிந்து அதை தீர்ப்பது அதை பல வகையில் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் மாமன்ற உறுப்பினருக்கும் ஒரு அலுவலகம் இருக்கு அதன் மக்கள் உடைய கோரிக்கைகளை பெற்று அதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம் .

அதேபோல் ,இன்றைக்கு இருக்கிற டிஜிட்டல் இணையதள யுகத்தின் எல்லா கால் சென்டர் ஆன்லைன் வாட்சப் இந்த மாதிரி கருவிகளை பயன்படுத்தி அதில் மக்கள் கொடுக்கிற கோரிக்கைகளை புகார்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குறதுக்கு முயற்சி செய்திருக்கிறோம் அதே போல் என் தொகுதியில் அங்கங்கே புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு அதிலிருந்து வர புகார்களையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறோம் . ஆண்டுக்கு ஒரு முறை அரசாங்கத்துடைய நிதி திட்டத்தை வகுக்கும் பணி நிதிநிலை அறிக்கை மற்றும் வரும் ஆண்டுக்கு வரவு செலவு திட்டம் என்பதை பட்ஜெட் என்று கூறும் அந்த நிகழ்வு இந்த நிதியாண்டு மார்ச் 31 உடன் முடிய நிலையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி புது ஆண்டு வரும் சூழ்நிலையில் புது நிதியாண்டு இந்த நிதி நிலை அறிக்கை இந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது.

அதற்கு பிறகு துறை துறையாக மானிய கோரிக்கைகள் மாநில சட்டமன்றத்திற்கு சமர்ப்பிக்க உள்ளோம். அமைச்சர்கள் எல்லாம் மாநகராட்சிகளுக்கு இணைக்கும் துறையாக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானிய கோரிக்கை வருவதற்கு உதவும் வகையில் அதை சமர்ப்பிக்க உதவும் வகையில் இந்த நேரத்தில் இத்தகைய நிகழ்வை நடத்தி அதனால் மக்கள் கோரிக்கைகளில் முக்கியமான பல நபர்களுக்கு பொதுவாக இருக்கும்.

எனவே ,மாநில அளவில் நிதியை ஒதுக்கி ஒரு மாபெரும் முயற்சியாக எடுக்க வேண்டிய என்னெல்லாம் பணிகள் உண்டு என்று கண்டறிந்து அதை துறை அமைச்சர்
நேரு மற்றும் துறை செயலாளர் கார்த்திகேயனிடம் வழங்கி, இதனை இந்த ஆண்டு நிதி ஒதுக்கி இந்த பணியை செய்வதற்கு உதவுங்கள் என்று கோரிக்கை வைக்க உள்ளோம்.
அதற்காக இத்தகைய முகாமை இன்றைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்றார்.

இந்த முகாமின் போது, மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையாளர்சித்ரா விஜயன், மதுரை வருவாய் கோட்டாட்சியர் ர.த.சாலினி ,தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சங்கீதா மத்திய மண்டலத்
தலைவர் பாண்டிச்செல்வி ,மிசா பாண்டியன், சரவண புவனேஸ்வரி, மற்றும் அரசு அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து
கொண்டனர்.