• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு கிக் பாக்ஸிங் தற்காப்பு கலை விழிப்புணர்வு நிகழ்ச்சி

ByG.Suresh

Mar 8, 2025

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு அவர்களை வலிமை மிக்கவர்களாக ஆகும் விதமாகவும், ஊக்குவித்து கொண்டாடும் விதமாகவும், தனியார் கல்லூரி அரங்கத்தில்” கிக் பாக்ஸிங் தற்காப்பு கலை விழிப்புணர்வு” நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அங்கீகாரம் பெற்று “ஃபிட் இந்தியா” மற்றும் “வாகோ இந்தியா கிக் பாக்ஸிங் ஃபெடரேஷன்” இனைந்து இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலும் நடத்த பட்டு வருகிறது. இந்த கிக்பாக்ஸிங் தற்காப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிவகங்கை மாவட்ட கிக் பாக்ஸிங் சங்க தலைவர் சதிஷ்,செயலாளர் திரு.குணசீலன் தலைமையில், தலைமை பெண் பயிற்சியாளர் சு. சித்ரா மற்றும் துணை பயிற்சியாளர் பூ.ரே விக்னேஷ் ஆகியோர் கல்லூரி மாணவிகளுக்கு சிறப்பாக தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்பட்டது.

மேலும் இந்த பயிற்சி முகாமில் சிறப்பாக பங்காற்றிய முதலாம் ஆண்டு ECE டிபார்ட்மென்ட் மாணவி பிரியதர்ஷினி சிவகங்கை கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆறு மாத கால இலவச கிக் பாக்ஸிங் பயிற்சியும் மேலும் மாவட்ட, மாநில அளவில் போட்டியில் பங்கு பெற சங்கமே பொறுப்பேற்கும் என அறிவிக்கப்பட்டது மேலும் அனைத்து மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்க பட்டது.