• Mon. Aug 17th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

ஓய்வூதியத்தை வழங்காத இரண்டு கல்வித்துறை அதிகாரிகளுக்கு சிறை தண்டனை

குமரியில் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்காத இரண்டு கல்வித்துறை அதிகாரிகளுக்கு சிறை தண்டனை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது.

உயர் நீதிமன்ற மதுரை தீர்ப்பால் குமரி மாவட்டத்தில் ஒட்டுமொத்த கல்வித்துறையினருக்கு ஆச்சரியத்தையும், அச்சத்தையும் கொடுத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு, ஓய்வூதிய பலன்களை வழங்காத கன்னியாகுமரி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட கல்வி அலுவலர் மோகன் ஆகியோருக்கு ஒரு வாரம் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று (மார்ச்_5) வழங்கிய தீர்ப்பு மாவட்டம் முழுவதும் ஒரு பரபரப்பை பற்ற வைத்துள்ளது.