• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

நீலகிரி மாவட்டத்திற்க்கு புதிய ஆட்சியர் – தமிழக அரசு

Byமதி

Nov 26, 2021

நீலகிரி ஆட்சியர் (கூடுதல் பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி மாற்றம் செய்யப்பட்டு, மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ்.பி.அம்ரித் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இன்று காலை 10 மணிக்கு நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக அம்ரித் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆட்சியர் அம்ரித் நகராட்சி நிர்வாகத்தின் இணைய ஆணையராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நீலகிரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த இன்னசென்ட் திவ்யா மாற்றம் செய்யப்பட்டார். அவர் மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் பணி அமர்த்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது அம்ரித் நியமிக்கப்பட்டுள்ளார்.