• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திமுக அரசாவது மேம்பாலம் கட்டித் தருமா? மக்கள் ஏக்கம்

பழையனூர் கிருதுமால்நதியில் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் தண்ணீர்! சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்திற்கு இடையே போக்குவரத்து துண்டிப்பு!! மேம்பாலம் அமைக்கப்படுமா? 30 கிராம மக்கள் எதிர்பார்ப்பு!

சிவகங்கை, விருதுநகர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது பழையனூர் கிராமம். இக்கிராமத்தில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம் பள்ளிக்கூடம் மற்றும் வணிக நிறுவனங்களுக்காக ஓடாத்தூர், வல்லாரேந்தல், எஸ். வாகைகுளம், சிறுவனூர் உள்ளிட்ட 30 கிராம மக்கள் தரைப் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது பருவ மழை பெய்ததை தொடர்ந்து வைகை ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் கிருதுமால் நதி வழியாக பழையனூர் தரைப் பாலத்தை நிறைந்து செல்கிறது. இதனால் 30 கிராம மக்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சிலர் ஆபத்தை உணராமல் மார்பு அளவு தண்ணீரில் கடந்து சென்றும் வருகின்றனர். தண்ணீர் வேகம் அதிகரித்து வருவதால் 30 கிராமத்தைச் சேர்ந்த பல்லாயிர மக்கள் ஐந்து கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இக்கிராம மக்களின் 30 ஆண்டு கோரிக்கையான மேம்பாலம் கட்டும் அமைக்கும் திட்டத்தை தற்போதைய திமுக அரசு ஆவது நிறைவேற்றுமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கின்றனர்.