• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

பேருந்தில் இருந்து கீழே விழுந்து பெண் பலி

ByKalamegam Viswanathan

Jan 23, 2025

பேருந்தில் இருந்து கீழே விழுந்து பெண் பலி தற்கொலையா என போலீசார் விசாரணை!!

மதுரையில் இருந்து எழுமலை செல்லும் தனியார் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாலம் அருகே பஸ்ஸிலிருந்து குதித்து பலி. நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து எழுமலைக்கு செல்லும் தனியார் பேருந்தில் மாலை 3 மணியளவில் பயணம் செய்த பெண் பயணி நாகமலை புதுக்கோட்டை காமராஜர் பல்கலைக்கழக பாலத்தில் செல்லும் போது பேருந்தில் இருந்து குதித்து கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தலை ,கை, கால் ஆகிய இடங்களில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலே பலியானார் .

இது குறித்து தகவல் அறிந்து வந்த நாமலை புதுக்கோட்டை போலீசார் இறந்த பெண்ணின் இடத்தில் உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பெண் பயணி ஆரப்பாளையத்தில் இருந்து செக்கானூரணி செல்வதற்காக பயணச்சீட்டு பெற்றுள்ளார். மேலும் அருகில் உள்ளவர்களை விசாரித்ததில் செக்கானூரணி அருகே உள்ள புல்லானேரி , பொட்ட நாயக்கன்பட்டியைச் சேர்ந்த தனமாயன் என்பவரின் மனைவி சரஸ்வதி (வயது 55) என தெரியவந்தது.

சரஸ்வதி கிராம சந்தைகளில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார்.
வீட்டில் குடும்ப பிரச்சனை காரணமாக பஸ்ஸிலிருந்து சரஸ்வதி குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

இதனை அடுத்து சரஸ்வதியின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.