• Sat. Apr 26th, 2025

ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு

ByKalamegam Viswanathan

Jan 23, 2025

மதுரை விமான நிலையத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் முற்றிலும் சோதனைக்குப் பின் அனுமதி.

மதுரை விமான நிலைய உள்வளாகத்தில் 20 ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை பாதுகாப்பு காரணங்களுக்காக பார்வையாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 76வது குடியரசு தின விழாவை முன்னிட்டு குடியரசு தினவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் குடியரசு தினவிழாவிற்காக தயராகி வரும் வேலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலைய உள் வளாகம், விமான நிலைய ஓடுப்பதை மற்றும் விமான நிலைய சுற்றுப்புற கண்காணிப்பு கோபுரங்கள் , விமான நிலைய வெளிளாகம், அதிவிரைவு அதிரடிப்படை என ஐந்து அடுக்கு பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தமிழக போலீசார் விமான நிலையம் , வாகன சோதனை மையம், கார் நிறுத்துமிடம் ஆகியவற்றில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை விமானநிலையத்தி பயணிகள் வரும் வாகனங்கள் தீவிரமாக பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகிறது.

குடியரசு தின விழா வினை முன்னிட்டு கடந்த 20 ஆம் தேதி முதல் வரும் 31ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு விமான நிலைய உள்வளாகத்தில் பார்வையாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.