• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சென்னையில் 6 இடங்களில் அதிகாலை முதல் ஐ.டி ரெய்டு!

ByP.Kavitha Kumar

Jan 8, 2025

சென்னையில் தனியார் கட்டுமான நிறுவனம் உள்பட 6-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லி அடுத்த சாத்தங்காடு பகுதியில் உள்ள தனியார் மெட்டல் நிறுவனத்தில், வருமான வரித்துறையினர் இன்று காலைமுதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்திலும் வருமானவரி துறை சோதனை நடைபெற்று வருகிறது.

அத்துடன், தேனாம்பேட்டை, பூக்கடை, திருவொற்றியூர், சாத்தங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கட்டுமானம் மற்றும் மெட்டல் நிறுவனங்களுக்கு ச்சொந்தமான 6-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.