விருதுநகர் மாவட்டத்தில் ,,’யார் அந்த Sir?’ ஸ்டிக்கர்களை டூவீலர் மற்றும் கார்களில் ஓட்டும் பணியை அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ‘யார் அந்த சார் ?’ என்பது விடை தெரியா வினாவாக உள்ளது.
இதனைக் கண்டித்து அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பாக…தமிழகம் முழுவதிலும் அனைத்து வாகனங்களிலும் ‘யார் அந்த Sir ?’ என்ற பிரசுரங்கள் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பாக டூவீலர் மற்றும் நான்கு சக்கரவாகனங்களில் பிரசுரங்கள், ஸ்டிக்கர் ஒட்டும் பணியை மேற்கு மாவட்ட கழக செயலாளரும், கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்இதற்கான ஏற்பாடுகளை…விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.டி.முத்துராஜ் சிறப்புடன் செய்திருந்தார்.