• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ByP.Kavitha Kumar

Dec 23, 2024

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வரும் 30-ம் தேதிக்குள் சிறப்புக் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பல்வேறு காரணங்களால் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த நிலையில் நாடு முழுவதும் டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்தநிலையில், மருத்துவ இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக ஏரா (ERA) லக்னோ மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி. விஸ்வநாதன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது லக்னோ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள இடங்களை வருகிற 30-ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும், தேவைப்பட்டால் மற்ற கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்தலாம் என்றும் காலியாக உள்ள என்.ஆர்.ஐ. இடங்களையும் பொதுப்பிரிவில் சேர்த்து கலந்தாய்வு நடத்தலாம் என்றும் நாடு முழுவதும் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ள நேரத்தில் மருத்துவக் கல்லூரிகளில் காலி இடங்கள் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது