• Fri. May 29th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

சார் பதிவாளர் மீது தாக்குதல்.., காயமடைந்த சார் பதிவாளர் புகார்…

ByP.Thangapandi

Dec 7, 2024

மதுரை அருகே பேரையூரில் திருமண சான்று பதிவு செய்வதில் ஏற்பட்ட தகராறில் சார் பதிவாளர் மீது தாக்குதல் நடந்ததில் காயமடைந்த சார் பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் பேரையூர் சார் பதிவாளராக பணியாற்றி வருபவர் திருப்பதி, இவரிடம் பேரையூர் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தங்க புஷ்பம் என்ற பத்திர எழுத்தர் தனது மகளின் திருமணத்தை பதிவு செய்து சான்று பெற விண்ணப்பித்தாக கூறப்படுகிறது.

திருமண சான்று பெற வழங்கப்பட்ட விண்ணப்பத்தில் பெயர், முகவரியில் உள்ள திருத்தங்களை சரி செய்து வழங்குமாறு சார் பதிவாளர் கேட்டுக் கொண்ட நிலையில் அவசரமாக இந்த திருமண சான்று தேவை படுகிறது. உடனடியாக பதிவு செய்து கொடுங்கள் என பத்திர எழுத்தர் தங்க புஷ்பத்தின் கணவர் கேசவராஜா சார் பதிவாளர் திருப்பதியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த தகராறில் அலுவலகத்தில் இருந்த பூட்டால் தாக்கியதில் தலை பகுதியில் காயம் ஏற்பட்டு பேரையூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின் பேரையூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பேரையூர் காவல் நிலைய போலீசார் கேசவராஜா மீது வழக்கு பதிவு செய்து தேடி வருவதோடு, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளரை தாக்கிய சம்பவம் பேரையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.