• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ரேஷன் கடையில் உள்ள பொருட்களை தின்று சென்ற காட்டு யானைகள்…

BySeenu

Nov 25, 2024

தடாகம் அருகே ரேஷன் கடையில் உள்ள பொருட்களை காட்டு யானைகள் தின்று சென்றது.

கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, மருதமலை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் உலா வருகின்றன. அவ்வாறு வரும் காட்டு யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்தி சொல்வதும், கடைகளை சேதப்படுத்தி செல்வதும் தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில் நள்ளிரவு தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் ரேஷன் கடையை சேதப்படுத்தி உள்ளே இருந்த அரிசி உள்ளிட்ட பொருட்களை தின்று சென்றுள்ளது. சத்தம் கேட்டு வந்த ஊர்மக்கள் யானையை விரட்டினர்.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பும் இதே கடையை சேதப்படுத்தி சென்ற காட்டு யானைகள் தற்போதும் வந்து சேதப்படுத்தி ரேஷன் பொருட்களை தின்று சென்றுள்ளது.

அடிக்கடி இப்பகுதிக்கு வரும் காட்டு யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்துவதாகவும், ரேசன் கடை, மளிகை கடைகளை சேதப்படுத்துவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே வனத்துறையினர் யானைகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வராமல் இருக்கும் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.