• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வடகரை கண்மாயில் அனுமதியின்றி மண்அள்ளி செல்வதாக பொதுமக்கள் புகார்..,

ByKalamegam Viswanathan

Jul 27, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் வடகரை கண்மாய் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயம் மற்றும் குடிநீருக்கான நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது தற்போது பருவநிலை மாற்றத்தால் அதிகபட்ச வெப்பம் காரணமாக வடகரை கண்மாயில் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

இந்த நிலையில் வரட்சியை பயன்படுத்தி கண்மாயில் அனுமதியின்றி மண் அள்ளிச் செல்வதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சோழவந்தான் வடகரை கன்மாயில் நேரில் ஆய்வு மேற்கொண்டு அனுமதி இன்றி மண் அள்ளிச் செல்லும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கன்மாயின் நீர் ஆதாரத்தை பெருக்கும் வண்ணம் மண் அள்ளிச் செல்வதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். தினசரி 100க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் மண் அள்ளிச் செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.