• Mon. Jul 27th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடுபவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனம் படைத்தவர்கள்..,

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் குமரப்பா அரங்கில் தமிழ் நாடு தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக இரண்டாவது மாநில மாநாடு கருத்தரங்கு கவியரங்கு பட்டிமன்றம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கும்கோவை அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர் நலச் சங்கத் தலைவர் கவிஞர் ராமலிங்கம் தலைமை தாங்கினார்.பேராசிரியர் ராமசாமி,மாநிலத் துணைத் தலைவர் கள்கள் தேசிங்குராஜன், ராஜமாணிக்கம், மண்டல தலைவர் அழகுராஜா, மண்டல செயலாளர் செல்வம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரி யர் சிவசத்யா வரவேற்றார். இந்த மாநாட்டை விஜய் அன்பன் கல்லாணை எம்.எல்.ஏ., தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசிய தாவது:-சங்கம் வளர்த்த மது ரையில் தமிழ் சங்கங் களின் கூட்டமைப்பு சார்பாக நடத்தும் இரண்டாவது மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இது போன்ற மா நாடுகளை நடத்துவதில் எவ்வளவு சிரமம் உள்ள து என்பது பற்றி எனக்கு நன்றாக தெரியும்.தமிழக முழுதும் இருந்து இந்த மாநாட்டிற்காக தமிழ் வளர்ச்சி மட்டுமே குறிக்கோள் என்று எண்ணி வருகை தந்திருக்கும் தமிழ் ஆர்வலர்களை கவிஞர்களை புலவர்களை பார்க்கும்போது தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடுபவர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத மனம் படைத்தவர்கள் என்பதை காட்டுகிறது. மேலும் ஏழை எளிய படைப்பாளர்களின் படைப்புகள் நூல்களாக வடிவம் பெறஎன்னால் முடிந்த உதவியை நான் உறுதியாக செய்வேன்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மாநாட்டில்நாமக்கல் தமிழ் சங்க மாவட்ட செயலாளர் நாராயணமூர்த்தி தலைமையில் இலக்கியங்களில் மாமதுரை சிறப்புக்கள் என்ற தலைப் பில் கருத்தரங்கம் நடைபெற்றது. திருநெல் வேலி பாரதியார் உலக பொது சேவை நிதியம் மாவட்ட தலைவர் கணபதி சுப்ரமணியம் தலைமையில் இலக்கியங்கள் படித்து இன்புறுவதற்கா அல்லது பின்பற்றுவதற்கா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. வசந்த வாசல் கவி மன்ற கோவை மண்டல செயலாளர் முகில் தினகரன் தலைமையில் பண்பாடு வளர்த்த பாண்டியரின் மீன்கொடி, அகிலம் காக்கும் அழகன் முருகன், மங்கள மீனாட்சியின் மதுரை அரசாட்சி ஆகிய தலைப்புகளில் கவியரங்கமும் நடந்த து. இந்த மாநாட்டில் 23 மாவட்டங்களை சேர்ந்த தமிழ் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் சங்க மாவட்ட செயலாளர் கவிஞர் பொன். பனகல் பொன்னையா நன்றி கூறினார்.