கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் இந்தியா இன்க் மாநாடு சிஇஓ 2024 நடைபெற்றது.
கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் சிஇஓ 2024 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு எதிர்காலத்திற்கான தலைமை நிர்வாக அதிகாரியின் டைரியின் நுண்ணறிவு”. ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பங் கல்லூரி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி, மேலாண்மைப் பள்ளி சார்பாக கிருஷ்ணா நிறுவனங்களின் மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
இதில் கோவையில் உள்ள எல்ஜி எக்யூப்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜெய்ராம் வரதராஜ், இந்த நிகழ்விற்கான முக்கிய குறிப்பு உரையை வழங்கினார். இதில் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி மற்றும் அறங்காவலர் கே. ஆதித்யா முன்னிலை வகித்து தொடக்கவுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், கோவை எல்ஜி எக்யூப்மென்ட்ஸைச் சேர்ந்த டாக்டர் ஜெய்ராம் வரதராஜன் மற்றும் ஆனந்த குளோபல் நிறுவனத்தைச் சேர்ந்த கிரிஷ் வெங்கட் ஆகியோர் எதிர்காலத்தை வடிவமைப்பது போக்குகள், நுண்ணறிவுகள் என்ற தலைப்பில் விவாதித்தனர்.
புனேவில் உள்ள விஷ் கள்வெச்சனரி எல்.எல்.பி இன் நிறுவனர் டாக்டர் அனிதா க்ஷேத்ரி மற்றும் கோவா மற்றும் மும்பையில் உள்ள கோவா மைல்ஸின் நிறுவனர் மற்றும் சிஇஓ உத்கர்ஷ் தபாடே ஆகியோர் தடைகளை உடைத்தல், பெண்களை வழிநடத்துதல் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தின் எதிர்மறை அம்சங்களைப் பற்றி விவாதித்தனர்.
வாக்கரூ இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த நௌஷாத், லிமிடெட், தி கோகனட் கம்பெனியைச் சேர்ந்த பிரிதிவ்ராஜ் மற்றும் டிக்கெட் 9-ல் இருந்து சத்தோஸ் பிரேம்ராஜ் ஆகியோர் எம்பிஏ பயணம் மற்றும் எல்லைகளுக்கு அப்பால் உலகளாவிய முன்னோக்கு மற்றும் மாற்றத் தயார்நிலை குறித்து விவாதித்தனர்.
பிஎன்சி மோட்டார்ஸின் சிஇஓ மற்றும் இணை நிறுவனர் அனிருத் நாராயணன், பெங்களூரில் உள்ள கோடிங் மார்ட் இன் சிஇஓ மற்றும் நிறுவனர் செந்தில் குமார் மற்றும் வாக் சிஸ்டம்ஸ் இன் சி இ ஓ திரு செந்தில் குமார் பாலசுப்ரமணியன் ஆகியோர் வணிகத்தைப் பயன்படுத்தி வணிகத்தில் ஒரு புதிய சகாப்தமான ஆற்றல் மிக்க இந்தியா பற்றி விவாதித்தனர்.
தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கே.சுந்தரராமன், நிகழ்வின் முதன்மை விருந்தினர் மற்றும் பிற விருந்தினர்களை வாழ்த்தினார். நிகழ்வின் கருப்பொருளை ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனங்களில் நிர்வாகப் பள்ளிகளின் இயக்குநர் டாக்டர் சி என் நாராயணா விவாதித்தார் நிகழ்வைப் பற்றிய சில பின்னணி தகவல்களை பங்கேற்பாளர்களுக்கு வழங்கினார். ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, முதல்வர் டாக்டர் கே பொற்குமரன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் டாக்டர் சுமித்ரா எம். ஜி. ஆகியோர் பங்கேற்றனர்.