தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஜோசப் விஜய்க்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பேன். இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி அளித்தார்.
தமிழ்நாட்டில் காமராஜருக்கு பிறகு திராவிட கட்சிகளிலேயே நாட்டை ஆண்ட சிறந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான். அர்ஜுன் சம்பத் பெருமிதம் கொண்டார்.
சென்னையில் நடைபெற்ற பிராமணர்களை பாதுகாக்க வேண்டும் என நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிராமண சமுதாயத்திற்கு நன்றி தெரிவிக்கும் விழா மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்ற நிர்வாகிகளை சந்தித்து தனது நன்றிகளை தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்தித்து பேசும் போது..,
பசும்பொனில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சமாதிக்கு குருபூஜை நடைபெற்றது. பசும்பொன்னில் இருப்பது சமாதி. ஆனால் சென்னை மெரினாவில் இருப்பது கல்லறை. சமாதி வேறு.! கல்லறை வேறு.! மெரினாவில் இருப்பது எல்லாம் கல்லறை தான்.
டெல்லி கணேசன் மறைவு திரைத்துறைக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்து சமுதாயத்திற்கும் ஒரு பேரிழப்பு.
சென்னையில் நடைபெற்ற பிராமணர்கள் சமுதாய மாநாடு தமிழகத்தில் இன்றைக்கு பேசும் பொருளாக மாறி உள்ளது. பிராமண சமுதாயம் கேலி கிண்டலுக்கு ஆளானது. பிராமண சமுதாயம் இன்றைக்கு பாதுகாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் கடந்த 70 ஆண்டுகள் பிராமண சமுதாய மக்கள் ஒடுக்கப்பட்டனர்.

பிராமணர்களை சமுதாயத்தினரை பாதுகாக்க வேண்டும் என நடைபெற்ற மாநாட்டில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களும் பிராமண சமுதாயத்திற்காக குரல் கொடுத்தனர்.
நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்களுக்கு எதிராக பேசிவிட்டார் என ஆங்காங்கே பிரித்து வெட்டி ஒட்டி செய்திகளை பரப்பி தவறான செய்தியை பெண் என்றும் பாராமல் திராவிட சிந்தனைகள் கொண்ட தொலைக்காட்சிகள் அவரை சித்தரித்து காட்டியுள்ளது.
தெலுங்கு, தமிழ் எல்லாம் வேறு வேறு இல்லை.! எல்லாம் ஒரே தொப்புள் கொடி உறவு நாங்கள் பாரதியர்கள்.!
அமரன் திரைப்படம் இன்றைக்கு உலகம் முழுவதும் இந்திய தேசபக்தியின் இந்திய ராணுவத்தை உயர்த்திக் கட்டி இருக்கிறது. இந்த படத்தை தயாரித்தவர் ராஜ்கமல், வெளியிட்டவர் உதயநிதி (ரெட் ஜெயன்ட்) மூவிஸ்., இந்தப் படத்தை வைத்து நீங்கள் வசூல் செய்ய வேண்டாம். இப்படத்தின் மூலம் வந்த பணத்தை இந்திய ராணுவத்திற்கு நீங்கள் ஒப்படைக்க வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறை இன்றைக்கு மோசமாக உள்ளது. பள்ளியில் இன்றைக்கு சாதி ரீதியாக மாணவர்கள் ஒருவரை ஒருவர் பிரிந்து காணப்படுகிறார்கள். அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் கஞ்சா பழக்கங்கள் அதிகம் உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை எடுத்துவிட்டு அவருக்கு பதிலாக மூத்த அமைச்சரை நியமனம் செய்யலாம். அன்பில் மகேஷ் பொய்யா மொழியை துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனக்கு உதவியாளராக வைத்துக் கொள்ளலாம் அல்லது அவரது ரசிகர் மன்ற தலைவராக வைத்துக் கொள்ளலாம்.

தமிழகத்தில் மின்சாரதுறையும், போக்குவரத்துத்துறையும் திவால் ஆனதுறை. தமிழகம் இன்றைக்கு 104 மடங்கு கடன் சுமையில் அதிகம் உள்ளது.
தமிழக வெற்றி கழகம் அண்ணாமலை போன்று திமுகவின் ஊழலை அம்பலப்படுத்துவதாக அறிவித்திருக்கிறார்கள். அதற்கு நான் வரவேற்கிறேன், தமிழக வெற்றிக்கழகம் திமுகவில் ஊழலுக்கு எதிராக தமிழக ஆளுநரிடம் ஒப்புதல் அளிக்க வேண்டும். வரக்கூடிய தேர்தலில் ஐந்து முனை போட்டியாக இருக்கும், வரக்கூடிய சட்டமன்றத் தேர்தல் திமுகவிற்கும் பாஜகவிற்குமான தேர்தலாக இருக்கும்.
வகுப்புவாத பிரதிநிதித்துவம் தான் திராவிடம். பிறப்போக்கும் எல்லா உயிருக்கும் சமம் என்பது சனாதனம். 2026-ல் சில கிறிஸ்தவர்கள் ஓட்டும், நாம் தமிழர்களிடம் ஓட்டும், சிறுத்தைகள் ஓட்டும் வேண்டுமென்றால் தவெகவிற்கு செல்லலாம்.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஜோசப் விஜய்க்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பேன். தமிழ்நாட்டில் காமராஜருக்கு பிறகு திராவிட கட்சிகளிலேயே நாட்டை ஆண்ட சிறந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான்.