• Sat. Jun 27th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை

Byவிஷா

Nov 13, 2024

கனமழை காரணமாக, தமிழகத்தில் மயிலாடுதுறை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தின் வட மாவட்டங்களை நோக்கி நேற்று நகர்ந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது. இன்று இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலு இழந்து, காற்று சுழற்சியாக கிழக்கு காற்றை ஈர்க்கத் தொடங்கும் என்றும், இதனால் தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி வரை மழைக்கான வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கனமழை காரணமாக மயிலாடுதுறை, கடலுர் மற்றும் காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துள்ளனர்.