• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ரசிகர்களுக்கு நயன்தாராவின் பிறந்தநாள் ட்ரீட்!

Byமதி

Nov 18, 2021

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளை அடுத்து அவருடைய புதிய படம் குறித்த அறிவிப்பு மற்றும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். ‘கனெக்ட்’ என்று பெயர் வைத்திருக்கும் இந்த படத்தை மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இப்படத்தை இயக்குகிறார். தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் நயன்தாராவே இப்படத்தை தயாரிக்கிறார். தற்போது கனெக்ட் படத்தின் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் தற்போது நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடித்துவரும் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தின் தயாரிப்பாளரும், நயன்தாராவின் வருங்கால கணவருமான விகனேஷ் சிவன் ‘ஹேப்பி பர்த்டே கண்மணி’ என அப்படத்தின் நயன்தாராவின் ஸ்பெஷல் லூக்யையும் வெளியிட்டுள்ளார்.