• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுபானக் கடை அமைக்க எதிர்ப்பு

ByG.Suresh

Oct 7, 2024

மானாமதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தனியார் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர்.
மானாமதுரை நகராட்சி 1வதுவார்டு சாஸ்தா நகர் பகுதியில் உள்ள கல்குறிச்சி ,தீத்தான்குளம் எம்ஜிஆர் நகர் பகுதியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருவதாகவும், அப்பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் விடுதி,அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருவதாகவும், அப்பகுதியில் மாவட்ட நிர்வாகம் தனியார் மதுபானக் கடை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அந்த கடைகளை வேறொரு இடத்திற்கு மாற்ற வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். அப்பகுதியில் தனியார் மதுபான கடைகள் அமைந்தால் அந்த வழியாக பள்ளி செல்லவே மாணவிகள் அச்சப்படுகிற நிலை ஏற்படும். மேலும் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு ஆபாசமாக பேசுவதும், அரை நிர்வாணத்தோடு சுற்றித் திரிவதும் இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.