தூய்மையே சேவை பணிகளின் மூலம் இந்திய அஞ்சலக திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க ஏதுவாக அமைந்துள்ளதாக சிவகங்கை கோட்ட கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்தார்.
தூய்மையே சேவை இயக்கம் 2024 சிவகங்கை கோட்டத்திற்கு உட்பட்ட அஞ்சல் துறையைச் சார்ந்த அலுவலர்கள் அரசினர் உறைவிட பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியை தூய்மை செய்தனர்.
செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை சிவகங்கை அஞ்சலக கோட்டம் சார்பாக பல்வேறு பணிகள் மேற்கொண்டு வந்த நிலையில் இன்று பையூரில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் பையூரில் அமைந்துள்ள சிவகங்கை சமூக பாதுகாப்பு துறை கீழ் இயங்கும் அரசினர் குழந்தைகள் இல்லம் மற்றும் அதை சுற்றியுள்ள வீதிகளில் தூய்மைப்படுத்தும் பணியில் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் S.மாரியப்பன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அஞ்சலக ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
கோட்ட கண்காணிப்பாளர் தெரிவிக்கையில், இப்பணிகளின் மூலம் மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்து செல்ல ஏதுவாக அமைந்ததாக தெரிவித்தார்.