• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சாலையோரம் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர்.., தேவாரம் காவல்துறையினர் தீவிர விசாரணை…

ByJeisriRam

Oct 3, 2024

தேனி மாவட்டம் தேவாரம் உத்தமபாளையம் சாலையில் மல்லிகாபுரம் அருகே சாலையோரத்தில் ஒரு முதியவர் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் தேவாரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சார்பு ஆய்வாளர் வெங்கடேசன் தலையிலான போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அடையாளம் தெரியாத முதியவருக்கு 75 வயது இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவர் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்து இருந்தார்.

இறந்த முதியவருக்கு வலது கால் மொழியில் காயத்தழும்பு ஒன்றும், இடது கால் பாதம் மேல்பக்கம் காயத்தழும்பு ஒன்றும் உள்ளது. முதியவர் எங்கிருந்து வந்தார் எவ்வாறு இங்கு இறந்து கிடந்தார் என்பது குறித்தும், தேவாரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த முதியவரின் உடல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இறந்த முதியவர் குறித்து தகவல் தெரிந்தால் தேவாரம் காவல்துறையினருக்கு 94981 88229 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.