தேனி மாவட்டம், வீரபாண்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருட்கள் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தேனி உதவி ஆணையர் (கலால்), சுகாதார துறை, சமூக நலத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை உள்ளிட்ட துறை சார்பில் வீரபாண்டி அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போதைப் பொருட்கள் பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நடத்தினர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வீரபாண்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் உமாதேவி, கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 1100 பேர் கலந்து கொண்டனர்.