• Tue. Jun 23rd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்-யை துணை முதல்வராக நியமனம் செய்ய தீர்மானம்

ByP.Thangapandi

Sep 10, 2024

உசிலம்பட்டியில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்-யை துணை முதல்வராக நியமனம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டி, திருமங்கலம் விலக்கு, வலையபட்டி, மாதரை உள்ளிட்ட பகுதிகளில் திமுக உசிலம்பட்டி வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகளுடனும், உசிலம்பட்டி நகர் கழக நிர்வாகிகளுடனும் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் உசிலம்பட்டி வடக்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி தலைமையிலும், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்-யை துணை முதல்வராக நியமனம் செய்ய கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக போகிறார் என பரவலாக பேசப்பட்டு வரும் சூழலில் உசிலம்பட்டி நிர்வாகிகள் அவரை துணை முதல்வராக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.