- பல பேர் கொடும் வார்த்தைகளால் நம் மனதை காயப்படுத்தலாம். இந்த சூழ்நிலையில் நாம் பொறுமையுடன் இருக்கவும். இதனால் நீங்கள் கெட்டுப் போவதும் இல்லை; உங்கள் நிலை தாழ்ந்து போவதும் இல்லை. மேலும் வாழ்வில் யாரையும் அதிக அளவு நம்பாதீர்கள். ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தியுங்கள். நீதிக்கு புறம்பாக நடக்காதீர்கள். நீங்கள் வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும் சத்தியத்தை கடைபிடியுங்கள். நம் நாட்டு கலாச்சாரத்தோடு வாழப் பழகுங்கள். முடிந்தால் அதை பிறருக்கு கூறுங்கள்.
- கடவுளைத் தவிர யாரும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் நம்முடன் வரப்போவதில்லை என்பதை உணருங்கள். எனவே எந்த ஒரு செயல் செய்வதற்கும் பிறரை நம்பி இருக்காதீர்கள். அவர்களால் வரமுடியாவிட்டால் தைரியமாக தாங்களே சென்று வெற்றிகரமாக செய்து முடியுங்கள்.
- சில சமயம் நாம் எவ்வளவு மன உறுதியுடன் இருந்தாலும் சில சம்பவங்களால் நம் மன உறுதியையும் சுக்கு நூறாக வெடிக்கின்ற நிலை ஏற்படலாம். மனம் வெறுத்தும் போகலாம். எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். எதற்கும் ஒரு நாள் உண்டு எல்லோருக்கும் வாழ்வு உண்டு என்பதில் உறுதியாக இருங்கள். உங்களின் வியத்தகு செயலினால் நாளை உலகமே உங்களை போற்றி புகழாரம் சூட்டலாம். முயற்சி செய்யுங்கள் அதை விரும்பி செய்யுங்கள்.