• Tue. Jun 30th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மரியாதைக்குறைவாக பேசிய, அண்ணாமலையின் உருவ பொம்மை எரித்தும் கட்டையால் அடித்தும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

ByG.Suresh

Aug 28, 2024

அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து மரியாதைக்குறைவாக பேசிய, பாஜக மாநில தலைவர் அண்ணாமலயை கண்டித்து, சிவகங்கை மாவட்ட கழகச் செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி காளையார்கோவில் வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் ஒன்றிய செயலாளர் ஸ்டீபன் அருள் தலைமையில் சொக்கநாதபுரம் கடை வீதியில் ஒன்று கூடிய கழக நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பி அண்ணாமலையின் உருவ பொம்மையை கட்டையால் அடித்தும் காலால் மிதித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தி உருவபொம்மையை எரித்தனர்.

அதன் பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் அண்ணாமலையின் உருவ பொம்மை தண்ணீர் ஊற்றி அனைத்தனர். இப்போராட்டத்தில் ஒன்றிய பெருந்தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜ் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் SPL. சரவணன் முன்னாள் ஒன்றிய செயலாளர் சண்முகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். 25 க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் அண்ணாமலைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்பை தெரிவித்தனர்.