• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முதலைக்குளம் ஊராட்சியில் ஆதி திராவிடர் குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீடு: மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை;

ByN.Ravi

Aug 19, 2024

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சியில், உள்ள ஆதி
திராவிடர் காலனியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்க வேண்டுமென, ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தனர்.
இது குறித்து, ஊராட்சி மன்ற நிர்வாகம் செல்லம்பட்டி யூனியன் அலுவலகம் மூலமாக
மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்றது. மனு மீது ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, முதலைக்குளம் கிராமத்திற்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டார் அப்போது, ஆதிதிராவிடர் காலனி பகுதியில் வசிக்கும் மக்கள் வீடு இல்லாத நிலையில் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசித்து வந்த நிலை அறிந்து அவர்கள் வசிக்கும் இடத்திலேயே 30 குடும்பங்களுக்கு ஒரே இடத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீட்டு மனை ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து, ஒவ்வொருவருக்கும், ஒதுக்கப்பட்ட இடங்களை அளவீடு செய்து வீடு கட்டும் பணியினையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், செல்லம்பட்டி யூனியன் ஆணையாளர்கள் கீதா தங்கப்பாண்டி, மாவட்ட செயற்பொறியாளர் மற்றும் முதலைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி பாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்.