மதுரை மாவட்டம் சோழவந்தானில் இன்று அதிகாலை நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பெரிய கடை வீதியில் குடியிருந்து வரும் சதீஸ்கண்ணன் என்பவரது வீட்டில் இன்று அதிகாலை சுமார் 12.45 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இது தொடர்பாக சோழவந்தான் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை தீவிர படுத்தப்பட்டது.

வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான நாகர்ஜுனன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கான காரணம் குறித்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சோழவந்தான் போலீசார் தெரிவித்துள்ளனர்.








