• Fri. May 3rd, 2024

கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு

Byகாயத்ரி

Nov 13, 2021

கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில், கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு கனமழையைக் குறிக்கும் ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

அதன்படி, இன்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய 6 மாவட்டத்திற்கும், நாளை பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய 5 மாவட்டத்திற்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் மழை தொடரும் பட்சத்தில், இடுக்கி நீர்த்தேக்கத்தின் செருதோணி அணையின் ஷட்டர்கள் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படும். எனவே, இடுக்கி அணையின் கீழ் பகுதி மற்றும் பெரியாற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அக்டோபர் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரையிலான காலகட்டத்தில் கேரளாவில் 86 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *