• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சிறப்பு ரயில்கள் வழக்கமான ரயில்களாக மாறுகிறது

Byமதி

Nov 13, 2021

கொரோனா தொற்று முதல் அலையின் போது ரயில் போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டது. பிறகு சில முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன. தற்போது அந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழக்கமான ரயில்களாக பழைய கட்டணத்துடன் இயக்கப்பட இருக்கிறது.

ரயில்களுக்கு ஐந்து இலக்க எண்கள் வழங்கப்படுவது வழக்கம், அதன்படி சிறப்பு ரயில் எண்களின் முதல் இலக்கம் பூஜ்யத்தில் ஆரம்பிக்கும். இந்த சிறப்பு ரயில்கள் வழக்கமான ரயில்களாக இயங்க இருப்பதால் பழைய வண்டி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. பல ரயில்களுக்கு முதல் இலக்கம் மட்டும் மாறியது. அந்த ரயில்களுக்கு முதல் இலக்கமான பூஜ்ஜியத்திற்கு பதிலாக ஒன்று அல்லது இரண்டு என்ற எண் மட்டும் மாற்றம் செய்யப்படுகிறது. சில ரயில்களுக்கு ஐந்திலக்கங்களும் மாற்றப்பட்டன. அப்படி மாற்றப்பட்ட வண்டி எண் 06157/06158 சென்னை – மதுரை – சென்னை வாரம் இருமுறை சேவை எக்ஸ்பிரஸ் ரயிலது வண்டி எண் 22623/22624 எனவும், வண்டி எண் 06011/06012 கன்னியாகுமரி – டெல்லி நிஜாமுதீன் – கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலது வண்டி எண் 12642/12641 எனவும், வண்டி எண் 06155/06156 மதுரை – டெல்லி நிஜாமுதீன் – மதுரை தமிழ்நாடு சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலது வண்டி எண் 12652/12651 எனவும், வண்டி எண் 06063/06064 சென்னை – நாகர்கோவில் – சென்னை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலது வண்டி எண் 12667/12668 எனவும், வண்டி எண் 06019/06020 சென்னை சென்ட்ரல்- மதுரை – சென்னை சென்ட்ரல் வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரயிலது வண்டி எண் 20601/20602 எனவும், வண்டி எண் 06069/06070 திருநெல்வேலி – பிலாஸ்பூர் – திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலது வண்டி எண் 22619/22620 எனவும், வண்டி எண் 06071/06072 திருநெல்வேலி – மும்பை தாதர் – திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலது வண்டி எண் 22630/22629 எனவும், வண்டி எண் 06053/06054 மதுரை – பிகானீர் – மதுரை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலது வண்டி எண் 22631/22632 எனவும், வண்டி எண் 02205/02206 சென்னை – ராமேஸ்வரம் – சென்னை சேது எக்ஸ்பிரஸ் ரயிலது வண்டி எண் 22662/22661 எனவும் மாற்றப்படுகிறது.