• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பயிர்க்கடன் தள்ளுபடி – தமிழக அரசின் முடிவு செல்லும் உச்சநீதிமன்றம் அதிரடி

Byமதி

Nov 12, 2021

5 ஏக்கருக்கும் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற தமிழக அரசின் முடிவு செல்லும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

தமிழக அரசு 5 ஏக்கருக்கு குறைவாக விவசாய நிலம் வைத்திருப்போருக்கு பெற்ற கடனை தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது. எனவே இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிக நிலம் கொண்டருக்கும் இந்த சலுகை அளிக்கப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது,

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் வைத்திருப்போரும் பெற்ற கடனை தள்ளுபடி செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை என்று கூறிய நீதிபதிகள், விவசாயிகளின் பயிர்க்கடன் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்துள்ளனர்.