• Tue. Mar 25th, 2025

டீக்கடையில் தேநீர் அருந்திய முதல்வர் – பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

Byமதி

Nov 12, 2021

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த போது, சாலையோர கடையில் அமர்ந்து தேநீர் அருந்தி, பொதுமக்களுடன் கலந்துரையாடி செல்பி எடுத்துக்கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தினமும் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்துவருவதுடன், அங்குள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று மாம்பாக்கத்தில் ஆய்வு செய்தார். அதன்பின், மாம்பாக்கதில் இருந்து முடிச்சூர் செல்லும் வழியில் அமைந்துள்ள சாலையோர தேனீர் கடைக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தேனீர் அருந்தினார். அப்போது அங்கிருந்தவர்களிடம் மழை பாதிப்புகள் பற்றி கேட்டறிந்தார். அங்கிருந்தவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

முன்னதாக சென்னை, தேனாம்பேட்டை, ஆஸ்டின் நகரில், சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.