பேரழகனே!
வானம் என்ன இவ்வளவு அழகாக இருக்கிறது இன்று
விண்மீன்கள் கண்சிமிட்டி
கண்சிமிட்டி சிரிக்கிறதே இவளை பார்த்து
என்ன காரணமாக இருக்கும்
ஓ புரிகிறது
மேகத்துக்குள் புதைந்த நிலவு
மெதுவாக வெளி வந்து உலா வரப்போய்கிறதோ
ம்ம் வரட்டுமே என்ன
என்ன தான் நிலவே நீ ஒப்பனை
செய்து வெளி வந்து
உலா போனாலும்
அவனை விட அழகில் ஒரு படி
நீ கீழ் தானே
மீண்டும் அழகான வானம்
அவளை பார்த்து கண்சிமிட்டும்
நட்சத்திர கூட்டமும் எப்போதும் போலவே அவளை சீண்டும் விதமாக
நிலவாக அவன் பேரழகன்

கவிஞர் மேகலைமணியன்